திம்புலாகல
வட மத்திய மாகாணத்தில் பொலன்னறுவை எனும் மாவட்டத்தில் சேனபுர எனும் கிராமத்தில் அழகிய சூழலில் எமது பாடசாலை அமைந்துள்ளது. கல்லூரியின் கல்வி நடவடிக்கைகள் முதன்மை மற்றும் இடைநிலை என இரண்டு பிரிவுகளின் கீழ் மேற்கொள்ளப்படுகின்றன. அதில் கணித விஞ்ஞான பிரிவும் , மற்றும் 13 வருட தொடர் கல்வித் திட்டத்தின் கீழ் ஒரு தொழிற்கல்வித் துறையும் தொடங்கப்பட்டுள்ளது. இப்பிரிவு ஆரம்பிக்கப்பட்டுள்ள பிரதேசத்தில் உள்ள முன்னணி பாடசாலைகளில் எமது பாடசாலையும் ஒன்று.
நவீன விஞ்ஞான தொழில்நுட்ப மாற்றங்களுக்கேற்ப எதிர்கால சவால்களுக்கு வெற்றிகரமாக முகங்கொடுக்கக் கூடிய சமூகத்தைக் கட்டியெழுப்புதல்
தரமான கற்றல் , கற்பித்தல் செயற்பாடுகள் மூலம் மாணவர்களுக்குத் தியாக மனப்பாங்கு, அர்பணிப்பு, பொறுப்புணர்ச்சியினூடாக சிறந்த அறிவு,திறன், மனப்பாங்கு, ஒழுக்க சமய விழுமியங்கள், நாட்டுப் பற்று , சமூக ஒற்றுமை கொண்ட மாணவர் சமூகத்தை உருவாக்குதல்.